Ticker

6/recent/ticker-posts

சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டன!




லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் பக்கெற் (லங்கா சதொச) ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,350 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவுக்கு விற்கப்படும்.

1 கிலோ சோயா மீட் (மொத்த விலை) 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.660 ஆக உள்ளது.

1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 129 ரூபாவாக காணப்படும்.

1 கிலோ வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையான 239 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments