டுபாயில் இருந்து 43 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப் பட்டுள்ளார் என திரு.சுதத்த சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் வசிக்கும் 35 வயதான வர்த்தகரான இவர் அடிக்கடி விமானங்களில் சென்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்.
இவர் துபாயில் இருந்து EK-650 என்ற Emirates விமானத்தில் 05/18 காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
02 கிலோ எடையுள்ள தங்கப் கையிருப்பு கம்பியில் சுற்றப்பட்டு, அவர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், முறையான சுங்க விசாரணையில், இந்த தங்க கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்டதுடன், தொழிலதிபருக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments