(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி ஆட்டோ பஸார் சந்தியில் வாழைப்பழம் மற்றும் இடியப்பம் விற்கும் கடை ஒன்று இன்று(02) பகல் 2 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

வாழைப்பழத்திற்கு புகை வைக்கும் போது ஏற்பட்ட தீக் கசிவு காரணமாக மேற்படி தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடையினுள் இருந்த வாழைப்பழம் மற்றும் ஏனைய பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளது என்பதுடன் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5