கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் நேற்று மதியம் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலையின் வார்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் இந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments