கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் பூரண அணுசரனையுடன் பாடசாலை முகப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள "BRILLIANT PARK" வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(8) பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் இடம்பெற்றது.
அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையில் கொடியேற்றும் கம்பம் மற்றும் நவீன பார்க் முறைமை இல்லாத குறையினை கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த காலங்களில் இவ் விளையாட்டுக் கழகம் இப்பாடசாலையில் கல்வி மற்றும் பெளதீக சார் வேலைத்திட்டங்களில் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ அஸ்தர், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம்.பழில்,,முகாமையாளர் எஸ்.எல் பஸ்வாக்,கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களான சல்மானுல் பாரிஸ்,பி.லுக்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் நாளையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு
0 Comments