20வருடங்களுக்கு மேலாக கல்முனையில் இலவசமாக மாணவர்களுக்கு கல்விச் சேவை வழங்கும் அமைப்பினரை கெளரவித்த அல் அஷ்ஹர் வித்தியாலயம் ...!
-------------------
(எம். என்.எம்.அப்ராஸ்
கல்முனை பிராந்தியத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அயராது செயலாற்றி கல்விச் சேவை வழங்கும் கல்வி, கலாசார மேம்பாட்டு தாபனம்(ECDO)மற்றும் கல்வி ஒளி வீசுகின்ற சுயாதீன குழுவினர் மன்றம்( EFIC)கல்வி தாபனங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலும்,கெளரவிப்பு நிகழ்வு கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற காலை ஆராதனை நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள் பங்குபற்றலுடன் கல்முனை பிராந்தியத்தில் சுமார் 20வருடங்களுக்கு மேலாக இலவசமாக மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விசார் நூலகம் நடத்தி வரும் கல்வி கலாசார மேம்பாட்டு தாபனம்(ECDO)மற்றும் கல்வி ஒளி வீசுகின்ற சுயாதீன குழுவினர் மன்றம்(EFIC)ஆகிய இரு அமைப்புக்களை அழைத்து மாணவர்களுக்கு அதன் கல்விச் சேவை தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டதுடன்,இந்நிகழ்வில் கல்வி,கலாசார மேம்பாட்டு தாபனம் (ECDO)தாபனத்தின சார்பாக அதன் நிறுவுனர்களில் பிரதானமானவர்களில் ஒருவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர்,
செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நபீல் மற்றும் கல்வி ஒளி வீசுகின்ற சுயாதீன குழுவினர் மன்றம் (EFIC)அமைப்பின் தலைவர் ஆசிரியர் எம்.எம்.சிறாஜி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் தமது அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி சேவைகள் தொடர்பாகவும்,மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்துக்கு ஆலோசனை வழங்கி உரையாற்றினார்கள்.
மேற்படி அமைப்புக்களின் கல்விச் சேவை பற்றி இதன் போது பாடசாலை அதிபர் பாராட்டி பேசியதுடன் எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக பிராந்தியத்திய மாணவர்களுக்கு கல்விச் சேவை வழங்க ஊக்கப்படுத்தி ஆலோசனை வழங்கினார்.
மேலும் கடந்தகால விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு
0 Comments