Ticker

6/recent/ticker-posts

சஹரானின் வண்ணாத்திவில்லு தோட்டத்தில் பூஜைகளை நடத்திக் கொண்டிருந்த கான்ஸ்டபிள்கள் இருவர் கைது.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீமுக்கு சொந்தமான புத்தளம்-வண்ணாத்திவில்லு-லெக்டோ தோட்டப் பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர் இன்று (19) அதிகாலை சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது

புதையல் அகழ்வு நடவடிக்கைக்காக பூஜைகளை மேற்கொண்ட பூசகர் ஒருவர், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரியவருகிறது.

தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருநாகல் முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் மூனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹரான் ஹஷீமுக்கு சொந்தமான இந்த தோட்டத்தில் வெடிபொருட்கள் மற்றும்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இரகசிய பொலிஸார் கண்டுபிடித்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் இரண்டு கான்ஸ்டபிள்கள் இந்த அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக சிறப்பு அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வனாத்தவில்லுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments