அம்பாறை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இறக்காமம் - வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டலில் 8 பேர் கொண்ட குழுவினரால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினராலேயே ஹோட்டலில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் இதனை தடுத்து நிறுத்த முயன்ற ஹோட்டல் உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர் உட்பட தாக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம் முரண்பாட்டிற்கான காரணம் இவரை கண்டறியப்படவில்லை, மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு
0 Comments