Ticker

6/recent/ticker-posts

550 பிள்ளைகளுக்குத் தந்தையான நபர் உயிரணு தானம் செய்வதற்கு நெதர்லாந்து நீதிமன்றம் தடை


உயி­ரணு தானம் மூலம், குறைந்­த­பட்சம் 550 பிள்­ளை­க­ளுக்குத் தந்­தை­யா­ன­தாக கரு­தப்­படும் நபர் ஒருவர், மேலும் உயி­ரணு தானம் செய்­வ­தற்கு தடை விதித்து நெதர்­லாந்து நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்­நபர் 41 வய­தான 'ஜொனதன் எம்' என மாத்­திரம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். உயி­ரணு தானம் மூலம் பிறந்த பிள்­ளை­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­கான அமைப்பு ஒன்றும், அவரின் உயி­ரணு தானம் மூலம் பிள்­ளை­யொன்­றுக்குத் தாயான பெண்ணும் இந்­ந­பரை நீதி­மன்­றத்­துக்கு இழுத்­தி­ருந்­தன.

நெதர்­லாந்து வழி­காட்­டல்­க­ளின்­படி, ஆண் ஒருவர், விந்­தணு தானம் ஊடாக அதி­க­பட்­ச­மாக 12 பெண்கள் மூலம், அதி­க­பட்சம் 25 குழந்­தை­க­ளையே பெற முடியும்.

ஆனால், தனது விந்­தணு தான வர­லாறு குறித்து, இந்­நபர் பெண்­க­ளிடம் பொய் கூறி­னா­ரென குற்றம் சுமத்­தப்­பட்­டது.

வேறு வழியில் கருத்­த­ரிக்க முடி­யாத பெற்­றோ­ருக்கு ஜொனதன் எம் உதவ விரும்­பினார் என அவரின் சட்­டத்­த­ரணி நீதி­மன்றில் கூறி­னார்.

ஆனால், இந்­நபர் 2017 ஆம் ஆண்டு முதல் 550 முதல் 600 பிள்­ளை­களைப் பெறு­வ­தற்கு உத­வி­யுள்ளார் என நீதி­பதி தெரி­வித்­துள்ளார்.

இதனால், புதிய பெற்­றோர்­க­ளுக்கு ஜொனதன் எம் உயி­ரணு தானம் செய்­வ­தற்கு தடை விதிப்­ப­தாக நீதி­பதி தேரா ஹெஸ்லிங்க் அறி­வித்தார். 

உயி­ரணு தானம் செய்யும் நோக்­குடன் எந்­த­வொரு பெற்­றோ­ரை­யும் தொடர்பு கொள்­வ­தற்கும் தனது சேவை குறித்து விளம்­பரம் செய்­வ­தற்கும் அந்­ந­ப­ருக்கு நீதி­மன்றம் தடை விதித்­துள்­ளது.

இந்த உத்­த­ர­வு­களை மீறி உயி­ரணு தானம் செய்யும் ஒவ்­வொரு தட­வையும் 100,000 யூரோ அபா­ராதம் உட்­பட மேல­திக அப­ரா­தங்­களை செலுத்த வேண்டும் என நீதி­பதி கூறினார்.

இந்­நபர், காட்டுத் தீ போன்று பெரும் எண்ணிக்கையான விந்­தணு தானம் செய்­­­வதை நிறுத்­தி­ய­மைக்­காக நீதி­மன்­றத்­துக்கு தான் நன்றி கூறு­வ­தாக வழக்குத் தொடுத்த, 'ஈவா' என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பெண் கூறி­யுள்ளார். 

ஜொனதன் எம்மின் நூற்­றுக்கும் அதி­க­மான பிள்­ளைகள் நெதர்­லாந்தில் பிறந்­துள்­ளன. ஆனால், டென்மார்க் மருத்­து­வ­ம­னையில் கிறையோஸ் என்ற பெயரில் உயி­ரணு தானம் செய்­த­தா­கவும், அந்த உயி­ர­ணுக்கள், வேறு நாடு­க­ளி­லுள்ள தனியார் முக­வ­ரி­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கவும் நீதி­பதி தீர்ப்பில் தெரி­வித்­துள்ளார்.

நூற்­றுக்­க­ணக்­கான சகோ­தர சகோ­தரி­­களைக் கொண்ட பெரும் உற­வினர் வலை­­ய­மைப்­பொன்றில் தமது பிள்ளைகள் இருக்கும் நிலையை பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ளனர் எனவும், இப்பிள்ளைக­ளுக்கு எதிர்மறையான உளவியல் விளை­வுகள் ஏற்பட சாத்தியம் உள்ளதாக தான் கருது­­ வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments