Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலில் பரபரப்பு... இலட்சக்கணக்கானோர் இணைந்து வரலாறு காணாத போராட்டம்.


இஸ்ரேலிய நீதித்துறையினை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக அந்த நாட்டின் பல பாகங்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வீதி போராட்டங்களில் பங்குகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இஸ்ரேலிய சரித்திரத்தில் இவ்வாறான அதிக எண்ணிக்கையில் மக்கள் வீதியில் இறங்கி போராடுவது இதுவே முதன்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் காரணமாக நீதிமன்றங்களின் அதிகாரம் கட்டுப்படும் என்பதுடன் அரச நிறுவனங்களிற்கு இடையேயான சமநிலை பேணப்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


இந்த கருத்தினை மறுத்துள்ள எதிர்தரப்பினர், இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ளனர்.


இந்தநிலையில், இஸ்ரேலிய நீதித்துறையினை மாற்றியமைப்பதற்கான சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றில் அந்நாட்டு பிரதமரால் முன்வைக்கப்படவுள்ளது.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 🫵👇

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments