இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் புதிய தரவு படி இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் தரவுப் படி , அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை திங்கள்கிழமை ரூ.332.81ல் இருந்து இன்று ரூ.320.27 ஆகவும், விற்பனை விலை ரூ.356ல் இருந்து ரூ.343 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், திங்கட்கிழமை கொள்வனவு விலை ரூ. 331.48 ஆக இருந்து இன்று ரூ.314 ஆகவும் குறைந்துள்ளது
விற்பனை விலை 350.00 இல் இருந்து ரூ 336 ஆக குறைந்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில் இன்று அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 315 ஆகவும் விற்பனை விலை ரூ.330 ஆகவும் குறைந்துள்ளது.
0 Comments