மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (27) 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அன்பாஸ் (17 வயது) என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கமாக சென்ற வேன் துவிச்சக்கர வண்டி மீது மோதி விட்டு தப்பியோடியுள்ளது. இதன்போது, வேனின் இலக்கத்தகடு கழன்று கீழே விழுந்துள்ளது. துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இளைஞரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇
0 Comments