Ticker

6/recent/ticker-posts

ரூபாயின் பெறுமதி உயர்வது ஒரு கட்டுக்கதையாகும்.



ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நிகழ்வு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்

ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது பொருளாதாரத்தை மேம்படுத்த அன்றி மாறாக அரசியல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் , எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது என்றார்.

தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் மத்திய வங்கி இப்போது சுதந்திரமாக செயற்படுவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு அது இப்போது முடிவுகளை எடுப்பதில்லை. அரசாங்கத்தின் உந்துதலுக்கு ஏற்றவாறு தான் செயற்படுகிறது

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படுவதாகவும், நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது, தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் மேலும் பல கட்டுக்கதைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 🫵👇

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments