Ticker

6/recent/ticker-posts

புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசு விவகாரம் ... பொலிஸ் விசாரணையில் 26 வயது திருமணமாகாத பெற்றோர் சிக்கினர்.


கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா புகையிரதத்தில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர்.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இளைஞன் தெஹிவளை பகுதியில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டு, அவரை கொழும்பு பகுதிக்கு அழைத்து வந்து தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 🫵👇

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments