.
ஹொரணை குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கார் ஒன்றும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி மக்கள் தலையிட்டு தீயை அணைத்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற நபர் சுமார் பதினைந்து மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் உள்ள கடை ஒன்றின் கூரையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
சாரதி கம்பி வேலியின் மேல் தூக்கி வீசி அருகில் உள்ள காணியில் விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.காயமடைந்த இருவரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 👇
0 Comments