உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான, வாக்களிக்கும் தினம் குறித்த ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகளை செய்வதில்லை, என அரசாங்க அச்சுத்திணைக்கள தலைமை செய்தியதிகாரி கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.
அவற்றை அச்சிடுவதற்கு சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமாக தேவைப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களிலால் சேவைகள் வழங்கப்படும்போது, அவற்றுக்கு தேவைப்படும் பணம் ஏற்கனவே பெற்றுக்கொண்டதன் பின்பே , பணிகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரச ஆலோசனைக்கமைய, தேவைப்படும் நிதி கிடைத்த பின்பே, முக்கிய ஆவணங்களை அச்சிட இருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஒன்றை நடாத்துவது சம்பந்தமாக உச்சநீதிமன்றில் தொடரப்பபட்டுள்ள வழக்கின் விசாரணை முடிவுகளுக்கமையவே, தேர்தலுக்கு தேவையான ஆவணங்களை அச்சிட உள்ளதாகவும் , இதுவரை எந்த ஒரு தேர்தலுக்கும் உபயோகிக்கக்கூடிய சில ஆவணங்கள் மட்டுமே அச்சிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேழும் தகவலுக்கு உள்ளே 🫵
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments