இது என்ன ஊரா சுவர்க்கமா ? கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் Kelebokka முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கெலபொக்க மலையை சுற்றி தேயிலை தோட்டங்களினாலும் குட்டி குட்டி நீர்வீழ்ச்சிகளினாலும் சூழ்ந்து பார்ப்பதற்கே மனதை கொள்ளை கொள்ளும் அழகை கொண்டது.
இந்த அழகிய கிராமம் கண்டியிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவிலும் மாத்தளையிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மாத்தளையில், இப்படி ஒரு இடம் இருப்பது பலரும் அறிந்திடாத ஒன்று. உண்மையிலேயே நம் மனதை கொள்ளை கொள்ளும் அழகை கொண்ட இந்த கிராமம் முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்களினாலும் அழகிய காடுகளினாலும் சூழ்ந்துள்ளது.
இந்த மலையில் camping செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த ஊரில் எப்போதும் முகத்தில் சிரிப்புடைய மிகவும் நெருக்கமாக பழகும் தமிழ் பேசும் நல்ல உறவுகளையும் சந்திக்கலாம்.
0 Comments