லாஃப் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,280 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.80 அதிகரித்து, அதன் புதிய விலை 2,112 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.
இது தவிர இரண்டு கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரித்து, அதன் புதிய விலை 845 ரூபாவாகும்.
இந்த விலை அதிகரிப்பு இன்று (பெப் 06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
0 Comments