Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் யானை தாக்குதலில் பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றது.

சம்பவம் இடம்பெற்ற வேளை யானை காவலுக்காக நின்ற ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க முஹமட் அலியார் சுபையிர் மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

மேலும், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.





இத்தாக்குதலில் காயமடைந்துள்ள 29 வயதையுடையவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேழும் தகவலுக்கு உள்ளே 🫵

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments