தேவையான நிதி கிடைக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு கங்கானி லியனகே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேவையான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதுடன், நிதி கிடைக்காத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.