தம்புள்ளை – குருணாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மல்சிறிபுர நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்நாயக்க என்பவரும் 62 வயதான பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தனது தாயுடன் 36 வயதான நபர் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொழும்பிலிருந்து ஹொரவபத்தானை நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments