வெளிநாட்டு பயணிகள் மூலம் தங்கள் வருவாயை பெருக்கும் விதமாக ஐக்கிர அரபு அமீரகத்தின் துபாய் முக்கியமான சில தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
அரபு நாடுகளிலேயே கெடுபிடிகளை தளர்த்தும் முக்கியமான நகரமாக இருப்பது துபாய்தான். அதேபோல ஷாப்பிங் செய்வதற்கு பிரபலமான இடமும், துபாய்தான். இந்த இரண்டுக்குமே பெயர்போன துபாய், தற்போது குறிப்பிட்ட ஒரு பொருளின் ஷாப்பிங்கில் சில தளர்வுகளை செய்துள்ளது. இந்த தளர்வு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மதுபானம் வைத்திருப்பதை மையப்படுத்தியது.
அப்படி என்ன தளர்வு அது என்கின்றீர்களா? அது என்னவெனில், 2023 ஜனவரி 1ம் தேதி முதல் மது விற்பனைக்கு துபாயில் விதிக்கப்பட்டு வந்த 30 சதவிகித வரியை அரசு ரத்து செய்துள்ளது; மேலும் மது விற்பனைக்கான உரிமங்களை இலவசமாக பெற அனுமதிக்க உள்ளதாகவும் துபாய் அரசு அறிவுப்பு வெளியிட்டிருக்கிறது.
இதற்கான ஆவணங்களாக Emirates ID அல்லது டூரிஸ்ட் பாஸ்போர்ட் போன்றவை அடையாள அட்டையாக பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தளர்வு, துபாய் முழுவதும் மதுபான விற்பனையை எளிமைப்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகள், துபாயில் வாழும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் வருவாயை ஈட்டும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த அதிரடி அறிவிப்பை துபாயின் இரு அரசு மதுபான விற்பனை நிறுவனங்களான Maritime and Mercantile International 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின் மூலம் துபாய் மக்கள் பிற எமிரேட்ஸ் நாடுகளுக்கு சென்று மதுபானம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இனி துபாயிலேயே வரி இல்லாமல் மது வாங்கும் அம்சம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இருப்பினும், முஸ்லிம் அல்லாதவர்கள் மது அருந்த 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் துபாய் போலீசால் கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகளை வைத்துதான் மது வாங்க அனுமதிக்கப்படுவர் என்பது துபாய் சட்டத்தின் விதி. (முஸ்லிம்களுக்கு தனி விதிகள் இருக்குமென சொல்லப்படுகிறது). மற்றவர்கள், அரசின் பிளாஸ்டிக் கார்டு இல்லாமல் மதுவுடன் போலீசிடம் சிக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவர் அல்லது கைது செய்யப்படுவர். அல்லது இரண்டையும் சேர்ந்துகூட அனுபவிக்க நேரிடும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம்.

0 Comments