Ticker

6/recent/ticker-posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்தது…


இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இருபது20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது, தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு நவம்பர் 17 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டி‍ருந்தார்,

இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கைபெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி டோனிங் சென்ரர் நீதிவான் டேவிட் பீரிஸ் இன்று ஒத்திவைத்தார்

Post a Comment

0 Comments