திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான வயல் காணிச் சண்டையின் போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கிறனர்.
இச்சம்பவம் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புல்மோட்டை பாலம்குளம் பகுதியிலே இச்குடும்பசண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது சலீம் மற்றும் வதூத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.
சுபைர் மற்றும் ஹஸன் ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹஸன் என்பவரின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments