அம்பாந்தோட்டையில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்துள்ளதை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைதீர்த்துள்ளனர்.
அம்பாந்தோட்டை கரையோர பாதுகாப்பு அலுவலகத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கரையோர பாதுகாப்பு படையினருக்கும் உள்ளுர் மீனவர்களிற்கும் இடையில் மோதல் வெடித்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு விபத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக வெடித்துள்ளது.
வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
0 Comments