Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து கடற்ரையில் சிரமதான பணி..!


( கல்முனை நிருபர்)

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ்

(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி

(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின், கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி (11)முன்னெடுக்கப்பட்டது.

இதில் இளைஞர்கள்,யுவதிகள், ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.

சமாதானதொண்டர்களான,ரி.டிலக்சினி,எம்.எஸ்.றக்சானா,டி.சாலினி,எம்.எம்.எம்.அஹ்னாப்


ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவர்களான எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.டினோசா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன்,இதன் போது வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,

நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்கே .டி.ரோகிணி, எம்.எல்.ஏ.மஜீத் , ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments