Ticker

6/recent/ticker-posts

கட்டார் நாட்டிற்கு செல்ல இருப்பவர்களுக்கான பதிவு!


VISA APPLY பண்ணியதும் Medical Test இற்கு 1 அல்லது 2 மாதங்கள் பின்னரே திகதி கிடைக்கும். 

Medical பிரச்சனை இல்லை என்றால் மட்டுமே உங்களுக்கு Visa கிடைக்கும். உடனடியாக கத்தார் நாட்டுக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் முன்கூட்டியே சென்று பரிசோதனை செய்ய வெளிநாட்டு முகவர்களிடம் 30 ஆயிரம்ரூபாய் வரை கொடுத்து முன்கூட்டி திகதி பெற்றுகொள்வார்கள்.

ஆனால் நாம் அவர்களிடம் அப்படி பணம் கொடுத்து திகதி பெற்றுக்கொள்ள வேண்டியது இல்லை.

நீங்கள் கிழமை நாளில் காலை 5 மணியளவில் அவர்களுடைய அலுவலக வட்ஸ்அப் இலக்கத்துக்கு உங்கள் முழு பெயர், விண்ணப்ப இலக்கத்தை டைப் செய்து அனுப்பினால் உங்களுக்கு அவர்களிடம் இருந்து வட்ஸ்அப்பில் பதில் வரும்.

ஒரு மணித்தியாலங்களுக்குள் வரும்படி (எனவே அருகில் இருந்து கொண்டு மெசேஜ் அனுப்புவது நன்று). அதில் 4 எழுத்து கொண்ட கோட் கிடைக்கும். அதை செக்யூரிட்டியிடம் காட்டினால் மாத்திரமே உள்ளே செல்ல முடியும்.

சென்ற பின்னர் 8700 ரூபாய் (தற்போது கட்டணம் மாறி இருக்கலாம்) மட்டுமே உள்ளே சென்று செலுத்த வேண்டும். அல்லது அடுத்த நாளை முயற்சி செய்யச்சொல்லி வட்ஸ்அப் மெசேஜ் வரலாம். 


அப்படி வந்தால் நீங்கள் தூர இடமிருந்து வந்து இருக்கிறோம் உதவும்படி ஆங்கிலத்தில் பதில் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பி சிறுது நேரத்தில் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட விதமான வட்ஸ்அப் மெசேஜ் வரும்.

#அறிவுறுத்தல்!

நீங்கள் அங்கு பதிலுக்கு காத்து இருக்கும் நேரத்தில் அங்குள்ள செக்யூரிட்டி உங்களை கூப்பிட்டு விசாரணை செய்யலாம். நீங்கள் இப்படி மெசேஜ் செய்து பதிலுக்கு காத்து இருக்கின்றேன் என்று சொன்னால் உங்களுக்கு உதவுகிறேன் என கூறி உங்கள் விண்ணப்ப இலக்கத்தை வாங்கி எடுப்பார். 

பின்னர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசுவது போல பேசு நடிப்பார். நீங்கள் அனுப்பிய வட்ஸ்அப் மெசேஜிற்கு பதில் வந்து உள்ளே நீங்கள் செல்ல போகும் போது அவரால் தான் appointment கிடைத்தது என்றும் பணம் கொடுத்தால் தான் உள்ளே விடுவேன் என சொல்வார்.

எனவே செக்யூரிட்டியிடம் உங்கள் விண்ணப்ப இலக்கத்தை கொடுக்க வேண்டாம். அல்லது அவரிடம் உதவி கேட்க முயற்சி செய்ய வேண்டாம். 

Medical cente Whatsup Number 

+94 76021 6229 

+94 77251 6554

Website Address 

https://www.qatarvisacenter.com/

மேழும் தகவலுக்கு உள்ளே 🫵

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments