உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று பாராளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்தே இந்த தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று பாராளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பிரகாரம், மார்ச் மாதம் 4ம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிய முடிகிறது.
0 Comments