Ticker

6/recent/ticker-posts

பாடசாலை சமூகங்களை கண் திறக்க வைத்த நானுஓயா விபத்து - பொறுப்புத் தவறியவர்களுக்கு ஜனகன் கண்டனம்.


நானுஓயா விபத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விபத்தில் காலமான அனைவருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் துயரங்களில் நாமும் பங்கெடுக்கிறோம். அதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவர்கள் அடங்கலாக அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 


விபத்துக்குள் ஏற்படுவது சகஜமென்றாலும் இவ்வாறான விபத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. தேவையற்ற விபத்தாகவே இதனை கருத வேண்டியதாக உள்ளது. சிறிய வீதி. கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத வீதி. தற்போது பொலிஸாரினால் குறித்த வீதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிகிறேன். இதனை முதலிலேயே செய்திருக்க வேண்டும். விபத்து நடக்க முதலில் அதனை தடுக்க வேண்டும். அதுதான் பொறுப்பானவர்களுக்கான செயல். அதனை செய்ய தவறியவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 



பாடசாலை பேரூந்து ஒன்று விபத்துக்கள் சிக்கியுள்ளது. இது ஒரு பாரதூரமான விடயம். பேரூந்தை ஒட்டிய சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அவதானமாற்ற ஓட்டமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அதனை போலீசார் பார்த்துக்கொள்ளட்டும். ஆனால் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாடசாலை சமூகமே அதிகம் அவதானமாக இருந்திருக்க வேண்டும். இது ஒரு பாடசாலைக்கான பாடமல்ல. அனைத்து பாசாலைக்குமான பாடம். 


பாடசாலையின பேரூந்துக்கான ஓட்டுனர்களை நியமிக்கும் போது பல விடயங்களை அவதானத்தில் கொள்ள வேண்டும். நிதானமான, பாதுகாப்பான ஓட்டுனர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா செல்வதாக இருந்தால் அதற்கான உரிய திட்டமிடல்கள், பாதுகாப்பான இடங்கள், பாதுக்காப்பான பயணம் என்பது தொடர்பில் உரிய திட்டங்களை செய்ய வேண்டும். இந்த விபத்தில் அந்த வீதியினால் பயணித்திருக்க கூடாது என்பது வெளிபப்டை உண்மை. இதனை ஓட்டுனருக்கு அறிவுறுத்தி உரிய பயண திட்டத்தினை செயற்படுத்தியிருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம். சிறுவர்கள் அடங்கலாக உயிர்கள் பாதுக்காப்பட்டிருக்கும். 


கலவி சுற்றுக்கள் அடங்கலாக ஏனைய பாடசாலை செயற்பாடுகளில் அதிபர், ஆசிரியர்கள், பாடசலையின் ஏனைய சமூகத்தினர் என அனைவரும் இணைந்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விபத்துகள் மட்டுமன்றி, இதர செயற்பாடுகளிலும் மாணவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். இது கட்டாயமானது. போதையிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது முதல் சகல பாதுகாப்புகளுக்கும் பாடசாலைகள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். 




இந்த பாடத்தினை சகல பாடசாலை சமூகமும் கவனத்தில் எடுத்து, மாணவர்களது பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்படவேண்டுமென வேண்டுகோள் விடுகிறேன்.

Post a Comment

0 Comments