எரிபொருளை விற்பனை செய்யும் போது QR குறியீட்டு முறையை முறையாக பின்பற்றாத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
குறியீட்டு முறைமையைப் பின்பற்றாமை கண்டுபிடிக்கப்பட்டால் எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தகைய நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
0 Comments