உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைவாய்ப்பு இன்மை வீதம் அதிகரித்து வரும் நிலையில் பலரும் வளைகுடா நாடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இது ஒரு நல்லதோர் முயற்சியாக இருந்தாலும் தற்போதய சூழலில் நாம் வேலை தேடி செல்லும் அல்லது குடிபெயர திட்டமிடும் நாட்டினது முழுமையான விபரங்களை தெரிந்து விட்டு செல்வது பொருத்தமானதாக அமையும்.
எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பொருளாதார மந்த நிலைமை காரணமாக பலரும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். எனினும் அந்நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்பு நிலைமை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வது முக்கியமானது. முதலில் வளைகுடா நாடுகளில் முன்னணி நாடாக இருக்கும் கத்தார் சம்பந்தமாக சில விவரங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.
தொழில் வாய்ப்பின்மை வீதம் (Unemployment Rate)
Qatar-0.3%
United Arab Emirates-3.4%, Sri Lanka-5.4%,
Saudi Arabia-7.4%.
(Source: World Bank Report-2021)
அதிகூடிய தொழில் வாய்ப்புகளை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் கத்தார் உள்ளது.
ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் மந்தகரமான தொழில் வாய்ப்பு சந்தையினை காட்டக் கூடியதாகவே உள்ளது.
இங்கு ஏற்கனவே Free VISA மூலம் வந்து வேலை வாய்ப்பு ஒன்றினை பெற்றுக்கொள்ள இயலாத பல சகோதரர்களை அன்றாடம் சந்திக்கக் கூடியதாக உள்ளது. அண்மையில் சமூக வலைதளங்களில் இது தொடர்பான ஆக்கங்களினை காணக் கூடியதாக இருந்த போதிலும் அதற்கு மாறுபட்ட வகையில் சில பின்னூட்டங்களையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. கத்தாரினுடைய உண்மை நிலைமை யாதெனில் உலக கால்பந்தாட்ட போட்டியினை நடத்தி முடிந்த கையோடு ஏனைய தொழில் துறைகள் எதுவும் இன்னும் முழுமையாக இயங்கத் தொடங்கவில்லை. சாதாரண தொழில் வாய்ப்புகளுக்கு கூட Walk-in Interviews களில் வரிசை வரிசையாக இளைஞர்கள் கையில் CV உடன் காத்துக் கிடப்பதனை காணக் கூடியதாக உள்ளது. Gulf Times இல் நாளாந்தம் வெளியிடப்படும் தொழில் வாய்ப்பு பட்டியல் மற்றும் தொழில் தேடுனர்களுக்கான Web Portal and WhatsApp groups கலில் திரும்ப திரும்ப வரும் அதே தொழில் வாய்ப்புகளே கத்தார் இல் தொழில் குறைவாகவே காணப்படுகின்றது என்பதற்கான சாட்சி.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அல்லது மூன்றாவது காலாண்டின் முற்பகுதியில் *Oil and Gas Industry, Infrastructure Development* துறைகளில் பாரிய அளவிலான முதலீடுகள் காணப்படுகின்ற மையினால் வேலை தேடி வர இருக்கும் எமது இளைஞர்கள் சற்று பொறுமையாக வேலை வாய்ப்புகள் சரளமாக பெருகியதன் பிற்பாடு இங்கு வந்து வேலை தேடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் பிரபல்யமான பல்கலைக்கழகங்களில் Degree பட்டப்படிப்பினை முடித்து GCC Experience உள்ள Professionals கூட இன்னும் தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுக் கொள்வதில் சிரமப்படுகின்றார்கள். கட்டார் நாட்டில் பல வருடங்களாக வேலை செய்தவர்கள் கூட தற்பொழுது வேலை இல்லாமல் திண்டாடி வருவது இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் எமது நாட்டில் இருந்து அங்கு உள்ள பொருளாதார சூழ்நிலைகளால் உந்தப்பட்டு வெளிநாட்டுக்கு வர நினைக்கும் எமது சகோதரர்களுக்கு இந்த விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியது எமது கடப்பாடாகும்.
சொத்துக்களை விற்று/ சேமித்த பணங்களை லட்சங்களில் செலவு செய்து விசா பெற்று இங்கு வந்து ஏனையவர்களின் தயவில் இருப்பதைவிட சாதகமான நிலைமை ஏற்பட்டதன் பின்னர் தொழில் தேடி வருவது மிகப் பொருத்தமாக இருக்கும். கத்தார் நாட்டினுடைய தொழிற்சந்தை இன்னும் விரிவடைய காத்திருக்கிறது என்பதற்கான குறிகாட்டிகள் சர்வதேச வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
*Qatar National Vision 2030* எனும் தேசிய குறிக்கோளை நோக்கி சென்று கொண்டிருப்பதால் *பொருளாதார பல்வகைமைப்படுத்தல் (Economic Diversification)* எனும் திட்டத்தின் ஊடாக ஏனைய பல புதிய துறைகளுக்கும்(Novel Job Opportunities)தொழில் வாய்ப்புகள் குவிய காத்திருக்கின்றன.
எனவே சற்று நிதானித்து பொறுமையாக வருவது மிக பொருத்தமாக அமையும்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍
0 Comments