Ticker

6/recent/ticker-posts

பொலிஸ் அதிகாரியை தேடி வலைவீசியுள்ள பொலிஸார்...


கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மேலும் நால்வரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மேலும் 04 பேருடன் இணைந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.


சந்தேகநபர்கள் அண்மையில் தமது பொலிஸ் பிரிவுக்குள் வந்து சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த லொறியை நிறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கெக்கிராவ-கிராநேகம பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் விகிலிய பிரதேசத்தில் வசிக்கும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜன்ட் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மகுலுகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிராநேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் தெரியவந்துள்ளது.


பொலிஸ் சார்ஜன்ட் தனது சொந்த பிரதேசத்தில் வசிக்கும் 4 பேருடன் தொடர்பு கொண்டு, பொலிஸ் சீருடை அணிந்து வெறிச்சோடிய பிரதேசங்களில் போக்குவரத்து கடமையை செய்வதாக கூறி வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்வார் .

சமீபத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவமும் அவ்வாறே நடந்துள்ளது.

அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் கலேவெல பிரதேசத்தில் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை கிராநேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெறிச்சோடிய இடத்தில் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக தெரிவித்துவிட்டு, அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.


இதனையடுத்து, லொறி சாரதியிடம் இருந்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை, சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் லொறியின் சாரதி மடக்கிப்பிடித்து மகுலுகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


மகுலுகஸ்வெவ பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments