Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு... மைத்ரிபால சிறிசேன உட்பட சிலர் சுமார் 236 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க நீதிமன்றம் உத்தரவு.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு உளவுத்துறை தகவல் பெற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனூடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பொது சேவை புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் ஆகியோர் தங்களது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு இழப்பீடாக ஒரு மில்லியன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் சமர்ப்பித்த 12 மனுக்களின் தீர்ப்பை அறிவித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Post a Comment

0 Comments