Ticker

6/recent/ticker-posts

நியூசிலாந்தில் வெள்ளம்: விமான நிலையத்தில் நீந்தி சென்ற பயணிகள்; 2 ஆயிரம் பேர் பரிதவிப்பு...!


நியூசிலாந்தில் வெள்ளம் பாதித்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகளை பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமையை புரட்டி போட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் அவசர காலநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆக்லாந்து விமான நிலையம் சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், விமான பயணிகள் அனைவரும் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்கள் நீரின் வழியே நீச்சல் அடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதுபற்றிய வீடியோக்களையும் பயணிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சூழலால், ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல்வேறு விமானங்களும் காலதாமதத்துடன் இயக்கப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டும் விடுகின்றன. பயணிகள் பலரும் இரவை விமான நிலையத்திலேயே கழிக்க கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் வெள்ளம் சூழ்ந்து ஒரு புதிய குட்டி தீவு போல் விமான நிலையம் காட்சியளித்தது.

வெளியே செல்வதற்கான, வேறு வாகன போக்குவரத்துகளும் காணப்படவில்லை. இதனால், பயணிகள் பலர் வீட்டுக்கு செல்ல முடியாமல் குழம்பி தவித்தனர். இதனை தொடர்ந்து, 2 ஆயிரம் பேர் வரை, ஒருநாள் இரவை ஆக்லாந்து விமான நிலைய முனையங்களிலேயே கழித்தனர். எனினும், பின்பு வாகன சேவைகள் இயக்கப்பட்டு உள்ளன

Post a Comment

0 Comments