Ticker

6/recent/ticker-posts

12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யும் கூகுள்


கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொஃப்ட் தனது 10,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்த மறுநாளே கூகுள் நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிநீக்கம் தொடா்பாக எல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, ஊழியா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் ஊழியா்களைப் பணியிலிருந்து நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில் கூகுளும் இணைந்துள்ளது.


கடந்த 2022, செப்டம்பா் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 1.86 இலட்சம். இவா்களில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் சுமார் 5,000 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில், 10,000-18,000 ஊழியா்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவை சோ்ந்த சுமார்1,500 போ் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.



Post a Comment

0 Comments