Ticker

6/recent/ticker-posts

மேற்கத்திய ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட FIFA தலைவர் கியானி இன்ஃபேன்டினோ....videoமேற்கத்திய ஊடகங்களை கிழித்து தொங்கவிட்ட FIFA தலைவர் கியானி இன்ஃபேன்டினோ....

ஐரோப்பியர்கள் 3000 ஆண்டுகளாக இந்த உலகிற்கு செய்தவற்றுக்கு அடுத்த 3000 ஆண்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டும். என்று அதிரடியாக பேச்சை துவங்கியவர்...

கத்தார் மீது வைக்கப்பட்ட மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், மது, மற்றும் LGBT பிரச்சனை என எல்லாவற்றையும் பேசிவிட்டார். கத்தாருக்கு நீதிப் பாடம் எடுக்கும் முன்னர் ஐரோப்பியர்கள் நாம் நமது வராலாற்றைப் பார்க்க வேண்டும். 

வளரும் (இந்தியா, இலங்கை, பங்களாதேஷ்) நாடுகளுக்கு கத்தார் வழங்கும் வேலை வாய்ப்புகளைப்போல ஐரோப்பிய நாடுகள் ஏதேனும் என்றேனும் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதா?

ஒரு கூலித் தொழிலாளி ஐரோப்பாவில் வேலை பார்க்க முடியுமா? ஆனால் வளரும் நாடுகள் பலவற்றுக்கும் அரபு நாடுகள் வேலை வாய்ப்பு வழங்கி அந்தக் குடும்பங்களை வாழ வைக்கின்றன.

ஆண்டு தோறும் பல பில்லியன் டொலர்களை கத்தாரில் இருந்து அள்ளிச் செல்லும் ஐரோப்பிய நிறுவனங்கள் என்றாவது மனித உரிமைகளைப்பற்றி பெசியுள்ளனாவா?

FIFA கத்தாரில் உலகக் கோப்பை நடத்தி சம்பாதிப்பதை விட இந்த ஐரோப்பிய நிறுவனங்கள் பல மடங்கு சம்பாதிக்கின்றன. அவர்கள் மனித உரிமைகளைப்பற்றி பேசி கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டவரின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிச் செய்தால் அவர்கள் இங்கிருந்து சுருட்டும் பணம் குறையும் என்பதால் அவர்கள் அதை பேச மாட்டார்கள்.

LGBTக்கு கத்தாரில் உரிமை இல்லை என்கிறார்கள். எந்த ஓரினச்சேர்க்கையாளராவது கத்தாருக்கு வரக்கூடாது என்று கத்தார் தடை விதித்ததா? ஓரினச்சேர்க்கை செய்வதற்கு கத்தாரில் அனுமதி இல்லையே தவிர ஓரினச்சேர்க்கையாளர்கள் தாராளமாக கத்தாருக்கு வரலாம்.

மதுவைப் பற்றி பேசுகிறார்கள். கத்தாரில் அரங்கத்தில் மது அருந்துவது முற்றாகத் தடை விளையாட்டைப் பார்க்கும் மூன்று மணி நேரத்தில் நீங்கள் மது அருந்தாவிட்டால் செத்துப் போவீர்களா? 

பிரான்சில் உலகக் கோப்பை நடக்கும்போது மதுவுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்னும் எத்தனையோ ஐரோப்பிய நாடுகள் உலகக்கோப்பை நடக்கும்போது அரங்கத்தில் மதுவுக்கு தடை விதித்தன. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள் அரபு நாடு என்பதால் முஸ்லிம்கள் என்பதால் இதை பிரச்சனை ஆக்குகிறார்களா?

ஆப்கானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அங்கிருந்து வெறும் 160 கால்ப்பந்து விளையாடும் பெண்களை மீட்பதற்கு எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்களது கதவை மூடிக்கொண்டபோது கத்தார்தான் அவர்களை மீட்பதற்கு முன்வந்தது.

FIFA Legacy Fund எனும் தொகையை மற்ற நாடுகள் தங்கள் கால்பந்து அணிக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால் கத்தார் அதை இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்திய அரசிடம் கொடுக்கப்போகிறது.

நீங்கள் எடுக்கும் இந்த நீதிப் பாடம் One Sided (பக்க சார்பானது), Hypocrisy (உள்ளொன்று புறமொன்று) & Unjust (சற்றும் நீதி இல்லாதது). மேலும் இது Rasicm (இனவெறியே) அன்றி வேறில்லை.

இந்த உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம் கத்தார் அரபுலகத்திற்கான வாசலை திறந்துள்ளது. இங்கே வந்து அரபுகளை பற்றி மேற்கத்தியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாமெல்லாம் மொழி, நிறம் இனம் என்று வேறுபட்டிருந்தாலும் ஒரே பூமியில் வசிக்கும் மனிதர்களே.

வீடியோ லிங்க்👇 https://youtu.be/Xq5RzV8dj8Y


குறைந்த பட்சம் முதல் 20 நிமிடங்கள் வீடியோவை தவறாமல் பாருங்கள். 

கத்தாரைப்பற்றி தவறு தவறாக எழுதுவதற்காக மேற்கத்திய ஊடகங்கள் மீது சவுக்கை சுழற்றியுள்ளார். மேற்கத்திய ஊடகவியாளார்கள் இவர் மீது உச்சக்கட்ட கடுப்பில் உள்ளனர். 

மேற்குக்கே அப்படி சொந்த நாட்டில் நடக்கும் சாதி வெறிச் செயல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பொருளாதாரப் பிரச்னை, வேலையின்மை என எந்த பிரச்சனையையும் கேட்கத் துப்பில்லாத விபச்சார ஊடகங்கள் கத்தாரைப் பற்றி எழுதும் முன்னர் இவரின் இந்த வீடியோவைக் கேளுங்கள்.

(நன்றி: முஹம்மது பீfர்)
Post a Comment

0 Comments