Ticker

6/recent/ticker-posts

வாட்ஸப்பில் 'delete for everyone' இற்கு பதில் தவறுதலாக 'delete for me' கொடுத்தால் இனி பதட்டப் பட தேவை இல்லை.


வட்ஸ் அப் பொதுவான தளம் என்பதால் இதில் நமது குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர், பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருமே இருப்பர். அப்படி இருக்கையில், சில சமயங்களில் வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை தவறுதலாக மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு அதிகம். இது சாதாரண தகவலாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே வில்லங்கமாக இருந்தால், உண்மையிலே அது பிரச்சினைதான்.


உதாரணமாக, நண்பர்களுக்கு இடையே பலர் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியோ, கிண்டல் செய்தோ பேசுவது உண்டு. அதுபோன்ற தகவல்கள் தப்பித் தவறி அலுவலக அதிகாரிக்கு அனுப்பிவிட்டால் எப்படி இருக்கும்? இதுபோன்ற பிரச்சினைகள் ஆரம்பக்காலத்தில் இருந்தன. பின்னர், இதுபோன்று தவறுதாக அனுப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கான வசதியை வட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.


மானத்தை காப்பாற்றும் 'delete for everyone'


அதாவது, அப்படி தவறுதலாக அனுப்பப்டும் தகவல் மீது ஒரு நொடி விரலை தொடர்ந்து அழுத்தினால் அதில் ‘delete for everyone’ என்ற ஒப்ஷன் இருக்கும். இதை கொடுத்துவிட்டால் அந்த தகவலை நாமும் பார்க்க முடியாது. யாருக்கு அனுப்பினோமோ அவர்களாலும் பார்க்க முடியாது. அப்படி பல பேரின் மானத்தை ‘delete for everyone’ காப்பாற்றி இருக்கிறது.


ஆனால், அதே சமயத்தில் பலர் அவசரத்தில் ‘delete for everyone’-க்கு பதிலாக delete for me கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். அந்த தகவலை உங்களால் மட்டும்தான் பார்க்க முடியாது. ஆனால், அதை யாருக்கு அனுப்பினோமா அவர்கள் தாராளமாக பார்க்க முடியும். இப்படியாக, தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்ப வேண்டிய தகவலை குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது யாருக்கு தெரியக்கூடாதோ அவர்களுக்கே அனுப்பி, delete for me கொடுத்து சிக்கி சின்னாபின்னமானவர்கள் பலர்.


அலறவிடும் delete for me


இப்படிப்பட்ட ஜீவன்களை காப்பாற்றவே, வட்ஸ் அப் தற்போது சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘delete for everyone’-க்கு பதிலாக delete for me கொடுத்து விட்டால்.. பதட்டப்பட வேண்டாம். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் இனி undo ஆப்ஷன் திரையில் 5 நொடிகள் தோன்றும். அதற்குள் அந்த undo ஆப்ஷனை கொடுத்துவிட்டால், ‘delete ஆன தகவல் மீண்டும் வந்துவிடும். அதை மீண்டும் அழுத்தி ‘delete for everyone’ கொடுத்துவிடலாம். என்ட்ராய்ட், ஐபோன் என அனைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கும் இந்த புதிய அப்டேட் அறிமுகாமாகி உள்ளது

Post a Comment

0 Comments