கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை கார் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று, விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.