Ticker

6/recent/ticker-posts

குழந்தைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் விடுத்துள்ள கோரிக்கை


எம்.வை.எம்.சியாம்)

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக குழந்தைகள் இலகுவாக நோய்கள் தாக்குவதாகவும் இதன் விளைவாக கடும் குளிரில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

காற்று மற்றும் குளிருடான காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு பல நோய்கள் ஏற்படக்கூடும். மேலும் கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் குறிப்பாக குளிர்ச்சியுடன் அதிகரிக்கும். எனவே இந்த நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்றால் பாதுகாப்பான உடை , தொப்பிகளை அணிந்து காலுறைகளை அணிந்து அழைத்து செல்ல வேண்டும்.

மேலும் காற்று மாசடைவு காரணமாக வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் . 

காற்று மாசடைவு எடை குறைந்த குழந்தைகளுக்கு உகந்ததல்ல. அவர்களின் உடல் வெப்பநிலை குறைந்து அவர்கள் இலகுவில் நோய்வாய் படலாம் என்றார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments