Ticker

6/recent/ticker-posts

சிறுநீரக கடத்தல் : சர்ச்சையாகும் ‘வெஸ்டர்ன் வைத்தியசாலை’


பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் கடந்த சில நாட்களாக “டெய்லி சிலோன்” தகவல் வெளியிட்டிருந்தது.

இதன்படி, அந்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் கடந்த நவம்பர் 25ம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இது இடம்பெற்றுள்ளது.

அதன்படி சிறுநீரகம் வழங்கிய குழு இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01) கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

பொரளை கோட்டை வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் ஊடாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்தி உடனடியாக நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் நீதிமன்றில் அறிவித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்த நீதவான் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்தார்.

து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த சிறுநீரகங்கள் 120 இலட்சம் முதல் 150 இலட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போது சுமார் ஐந்து பேர் தமது சிறுநீரகங்களை இந்த தனியார் வைத்தியசாலையில் வழங்கியுள்ள போதிலும் அந்த நபர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

பொரளை கோட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையான வெஸ்டர்ன் வைத்தியசாலைக்கு தனிநபர்களினால் சிறுநீரகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சிறுநீரக வழங்கியவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு வயது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாயும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து பெறப்படும் சிறுநீரகங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் போது, ​​இதற்கு புளுமண்டல் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இரு நபர்கள் தரகர் வேலைக்காக வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகவும், அதனால் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மூன்று தனியார் வைத்தியசாலைகள் ஊடாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தனர்.

இதன்படி, அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கள பத்திரிகையான தினமினசெய்தித்தாள் தனது செய்தியில், வைத்தியர் ரிஸ்வி ஷெரீப்புக்கு சொந்தமான பொரளை வெஸ்டன் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதுடன், இந்த மோசடியானது வலையமைப்புடன் நடத்தப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் உண்மைத் தன்மை இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்பதோடு, குறித்த வைத்தியரை தொடர்பு கொள்ள ‘டெய்லி சிலோன்’ முயற்சி எடுத்திருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

சமூக மட்டத்தில் இந்த செய்தியானது பலவிதமாக பேசும் நிலையில், சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரம் என வைத்தியர் ஷாபிக்கு எதிராக இனவாதம் தூண்டப்பட்டது போல் மற்றுமொரு இனவாதத்திற்கான தூண்டுதலாக இருக்கலாம் என்றும் கதைக்கப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் சட்டம் தன் கடமையினை சரிவர செய்தால் உண்மையான குற்றவாளி சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.




எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6































Post a Comment

0 Comments