Ticker

6/recent/ticker-posts

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்படுள்ள வாகனங்களை காவல்துறையினரின் பாவனைக்கு வழங்க நடவடிக்கை.


போதைப்பொருள் சுற்றிவளைப்பு உள்ளிட்ட காவல்துறையினரின் சோதனைகளுக்கு பயன்படுத்துவதற்கு, இலங்கை சுங்கத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடுவதற்காக மேற்கொண்ட ஆய்வு விஜயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


சட்டவிரோத இறக்குமதி காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்கள் சுமார் ஏழு வருடங்களாக துறைமுகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், அந்த வாகனங்கள் தொடர்பில் நிலவும் சட்டத் தடைகளை நீக்கி, மக்களின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.


போதைப்பொருள் கடத்தல் வேகமாகப் அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதை நாம் அறிவோம்.


ஒவ்வொரு சோதனைக்கும் சுமார் 12,000 வாகனங்கள் காவல் துறையிடம் உள்ளன. அவற்றில் பாதி 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.


இந்த வாகனங்கள் நாடு முழுவதும் உள்ள 600 காவல் நிலையங்களுக்கும், புதிதாக நிறுவப்பட்ட 111 காவல் நிலையங்களுக்கும் போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.


இதனையடுத்து, காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments