நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களில் வளிமாசுபாடு அதிகரித்து காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசம் உள்ளிட்ட இதயம் தொடர்பான நோயாளர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமாகும் எனவும் அவர் கோரியுள்ளார்.
0 Comments