லிட்ரோ எரிவாயு விலை சூத்திரத்தின்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.