Ticker

6/recent/ticker-posts

ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைப்பு: சட்ட மா அதிபர் தெரிவிப்பு



ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஒழுக்க நெறி பொலிஸ் படை 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அமைவாக ஆடை அணியாதோரை இப்படையினர் கைது செய்து வந்தனர்.

|ஒழுக்க நெறி பொலிஸுக்கு நீதித்துறையுடன் சம்பந்தமில்லை. அப்படை கலைக்கப்பட்டுள்ளது என ஈரானிய சட்ட மா அதிபர் மொஹம்மத் ஜாபவர் மொன்டாஸேரி இன்று தெரிவித்தார் என ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ. செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது.

நடத்தை முறைகளை ஈரானிய நீதித்துறை தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் அவர்கூறியுள்ளார்.




AFP Photo

தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை அணியாததால் ஈரானிய ஒழக்க நெறி பொலிஸ் படையினரால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயது யுவதி பொலிஸ் காவலில் வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்தார். 

அதையடுத்து ஈரானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் மோதல்களும் ஏற்பட்டிருந்தன. 

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பபமானதையடுத்து 300 இற்கும் அதிகமானோர் உயிரிந்துள்ளனர் என அந்நாட்டு இராணுவ ஜெனரல் ஒருவர் கடந்த வாரம் கூறியிருந்தார். 

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி 3 மாதங்கள் கடந்த நிலையல், ஈரானிய ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய ஒழுக்க நெறி பொலிஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அண்மையில் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments