Ticker

6/recent/ticker-posts

கொள்ளுப்பிட்டி விபத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது.


கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


நாட்டை விட்டு வௌியேறிய காரின் சாரதி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிய போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


விபத்து இடம்பெற்ற அதே நாளில் சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் தனது சொகுசு காரை முச்சக்கரவண்டியின் மீது பின்னால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.


முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments