Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவது அதிகரிப்பு ; வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவிப்பு.

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.



போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


13,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையால் சிறுவர் இல்லங்களில் தங்கியிருப்பதாகவும் அவர்களில் பலர் துஷ்பிரயோக சம்பவங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடும் அவர், இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா, “இந்த குழந்தைகளை காப்பாற்ற நாம் போராட வேண்டும். இல்லையென்றால் நமக்கு நாடு என்று ஒன்று இருக்காது.”எனக் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments