நீர் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மாதாந்த நீர் கட்டணத்தை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவி பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.
60 நாட்களுக்கும் மேலாக கட்டணத்தைச் செலுத்தாத அனைத்து குடிநீர் பாவனையார்களுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
சுமார் 8 இலட்சம் பேர் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments