Ticker

6/recent/ticker-posts

அக்குறனை வெள்ளம் : யார் பொறுப்புதாரிகள்? அதற்கான தீர்வுத்திட்டங்கள் !


அக்குரணை வெள்ளம்: யார் பொறுப்புதாரிகள்? அதற்கான தீர்வுத்திட்டங்கள்!

(முழுமையான அமைச்சரவை உப குழு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

மழைகாலங்களில் அக்குரணை வெள்ளத்தில் மூழ்குகின்ற போதெல்லாம் அதற்கான தீர்வுத்திட்டங்கள்

குறித்துப் பேசுவதும், மழைவிட்டபோது அதனை மறந்துவிடுவதும் வழக்கமான ஒரு விடயமாக மாறிவிட்டது. 

தற்போது என்றுமில்லாதவாறு அக்குரணை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இனியாவது இந்தப் பிரச்சினையை பிச்சைக்காரன் புண்போல் வைத்திருக்காமல் நிரந்தர தீர்வைக்காண மக்கள் ஒன்றுபடவேண்டும்.

இன்று, நேற்றல்ல பல வருடங்களாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிய வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமைக்கான பொறுப்புதாரிகள் யாரென்பதை அடையாளம் காணவேண்டும்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்தார் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகின்றது.

ரவூப் ஹக்கீம் முன்வைத்த அமைச்சரவை கூட்டத்தின் முன்மொழிவின் படி, அக்குரணை வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்க பின்வரும் யோசனையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. இதனை அமுல்படுத்தினால் மாத்திரம் வெள்ளத்தை தடுக்க முடியும்.

அடையாளம்காணப்பட்ட 190 கட்டிடங்களில் 20-28 வரையான கட்டிடங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனவும், அதன் பின்னரே வெள்ளப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments