இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹியூகோ லோறிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியை லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி 3பெனல்டி முறையில் 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது.
ஆர்ஜென்டீன அணி 3 ஆவது தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகியுள்ளது. இதற்கு முன் 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் ஆர்ஜென்டீனா சம்பியனாகியிருந்தது.
போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, லியோ மெஸி கோல் புகுத்தினார்.
புதிய சாதனை
இதன் மூலம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றில் குழுநிலைப் போட்டி, 16 அணிகளின் சுற்று, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி உட்பட அனைத்துக் கட்டப் போட்டிகளிலும் கோல் புகுத்திய முதல் வீரரானார் லயனல் மெஸி.
36 ஆவது நிமித்தில் ஏஞ்சல் டி மரியா ஆர்ஜென்டீனாவின் 2 ஆவது கோலைப் புகுத்தினார்.
இடைவேளையின் போது ஆர்ஜென்டீனா 2:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க. கிலியன் எம்பாப்பே கோல் புகுத்தினார்.
அதையடுத்து பிரான்ஸின் உற்சாக ஆரவாரம் தணிவதற்குள் மறுநிமிடமே, அதாவது 81 ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே பிரான்ஸின் இரண்டாவது கோலைப் புகுத்தினார்.
இது இச்சுற்றுப்போட்டியில் எம்பாப்பே புகுததிய 8 ஆவது கோல் ஆகும்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டம் 2:2 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்ததால் மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேரத்தின் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.

அதன்பின், 109 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸி அபார கோல் ஒன்றைப் புகுத்தினார்.
இதனால் ஆர்ஜென்டீனா 3:2 விகிதத்தில் மீண்டு;ம் முன்னிலையடைந்தது. இது மெஸி இறுதிப்போட்டியில் புகுத்திய 2 ஆவது கோலும் இச்சுற்றுப்போட்டியில் அவர் புகுததிய 8 ஆவது கோலுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 117 ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, கிலியன் எம்பாப்வே மீண்டும் கோல் புகுத்தினார். இதனால் மீண்டும் கோல் எண்ணிக்கை 3:3 விகிதத்தில் சமநிலையடைந்தது.
மேலதிக நேர ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 3:3 விகிதத்தில் சமநிலையில் இருந்ததால் தலா பெனல்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதில் ஆர்ஜென்டீனா 3:1 கோல்கள் விகிதத்தில் ல் வென்றது.
இச்சுற்றுப்போட்டியில் சம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 42 மில்லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா,/ 348 கோடி இந்திய ரூபா) பணப்பரிசையும் பெற்றுள்ளது.
2 ஆம் இடம் பெற்ற பிரான்ஸுக்கு 30 மில்லியன் டொலர்களை (1,113 கோடி இலங்கை ரூபா, 248 கோடி இந்திய ரூபா) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 வயதான ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி இந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக்கிண்ணப் போட்டி என ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
தற்போது, தனது தலைமையில்; ஆர்ஜென்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த பெருமையுடன் அவர் உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments