image

ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரமாண்ட  மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்தது. 

இதனால் ஹோட்டலிலிருந்து பெருமள நீர் கசிந்ததன் காரணமாக அருகிலுள்ள வீதியொன்று மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பேர்லின் நகர மத்தியிலுள்ள ரெடிசன் ப்ளூ ஹோட்டலில்  (Radisson Blu hotel) இந்த பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களின் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. உருளைவடிவமான இம்மீன் தொட்டிக்கு அக்வாடோம் (AquaDom) எனப் பெயரிடப்பட்டிருந்தது.

16  மீற்றர் (52 அடி) உயரமான இக்கண்ணாடித் தொட்டி ஒரு மில்லியன் லீற்றருக்கும் அதிகமான லீற்நீரைக் கொண்டிருந்ததுடன், அதில் சுமார் 1500 மீன்கள் வளர்க்கப்பட்டன. 

இன்று காலை 5.50 மணியளவில் இம்மீன்தொட்டி உடைந்தது. 

இதனால் ஹோட்டலிலிருந்து லட்சக்கணக்கான  லீற்றர் நீர் ஹோட்டலிலிருந்து கசிந்து வெளியேறியது. 

வீதியில் பெருமளவு நீர் புகுந்ததால், நிலைமையைக் கட்டுப்படுததுவத்றக நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக பேர்லின் தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது.